Posts

Showing posts from March, 2016

காடு

Image
காடு   பாதி  உயிர்களின்  ஆதி  படைத்தவன்  ஆன்மா  மிச்சமிருக்குமிடம்  பூமித்தாயின்  உயிர் வளர்க்கும்  மார்பகங்கள்  பல தளங்களில்  உயிர் வாழ  சமத்துவமாய்  மனதில் மட்டுமல்ல  உடலிலும்  இடம் தரும்  பிறர்க்காக  அமுது சேகரித்து  நதி நரம்பாய்  ஜீவன் புகட்டும்  தான்வாழ பிறர்  நலன் அழிக்கும் சிலருக்கு  பாடமாய்  தன்னை தானே  எரித்து  உயிர்ப்பிக்கும்  உயிர்கொடுக்கும்  தாயின் மார்பை  அறியாமல் கடித்துவிடும்  குழந்தை உண்டுதான்  மார்பகத்தையே உண்டு வாழ  நினைக்கும்  படைத்தவனை வெட்கப்பட  வைத்தபடி  ஒரே ஒரு குழந்தை  தன் நிலையை  மனதில்  நொந்தபடி மௌனமாக   காடு 

நத்தை

Image
நத்தை நிலவொளியில் மெதுவாகவேனும் துள்ளித்திரிந்தது சூரிய ஒளியால் உள்ளிளுத்தது

வரம்

Image
வரம் எனை நானே நம்பமுடியாத தருணங்கள் தான் வாழ்வின் சுவையரிய வாங்கிவந்த வரம் 

பன்னீர் பூக்கள்

Image
பூக்கள் பன்னீர் பூக்கள் .. பூக்கள் பன்னீர் பூக்கள் நீயும் நானும் .. இம்மழையும் இளவெயுலும்  நம் உள்ளத்தின் வண்ணங்கள்  முதுமையிலும் நினைஒவியமாய்  ஒளிர்ந்துடுமே .. ஒளிர்ந்துடுமே .. உன்விழியில் என்வுருவம்  என்விழியில் உன்வுருவம்  நிலைத்திடவே காலம் கண்மூடிடுமே..கண்மூடிடுமே..    பூக்கள் பன்னீர் பூக்கள் நீயும் நானும் .. என் இமைகள்  சோர்வில்லாமல் உனை  வண்ண ஒளியாய்  மனதினிலே  பதிந்திடுமே.. பதிந்திடுமே .. நம் உள்ளத்தின் வண்ணங்கள்  முதுமையிலும் நினைஒவியமாய்  ஒளிர்ந்துடுமே .. ஒளிர்ந்துடுமே .. பூக்கள் பன்னீர் பூக்கள் நீயும் நானும் .. திசைகள் பத்துண்டு  கைகள் இனைந்திருந்தால்  எத்திசை சென்றாலும்  தித்திக்குமே ...தித்திக்குமே ... பூக்கள் பன்னீர் பூக்கள் நீயும் நானும் .. உன்விழியில் என்வுருவம்  என்விழியில் உன்வுருவம்  நிலைத்திடவே காலம் கண்மூடிடுமே..கண்மூடிடுமே.. பூக்கள் பன்னீர் பூக்கள் நீயும் நானும் .. ****நன்றி: என் முயற்சிக்கு வித்திட்ட இப்பாடலை உருவாக்கிய குழுவிற்கு   pookkal panineer

காதல் மழை

Image
காதல் மழை  மரமும் மழையும் காதல் நெய்ததால் காலை என் தோட்டத்தில் மலர்.. நினைவுகளை துளித்துளியாய் விதைத்தது மலர் வழியே மண்ணில் மரம் 

இளவேனிற்காலம்

Image
இளவேனிற்காலம் வளர்ச்சியை நிறுத்தி  பலமாதாமாகிய  குச்சி குச்சியான  மரங்களும்  உயிரை ஒரு  புள்ளியில் ஒடுக்கியபடி  மரப்பொந்துகளில்   முயல்களும் அணில்களும்  பூமிக்கடியில் துளைகளில்  எலிகளும் உறைந்த நதியின் மேல்  வெறித்தப்படி நாரைகளும்  நதியின் கீழே  சன்னமான நீரோட்டத்தில்  சவமாய் மீன்களும்  கடுங்குளிர் போனாலும்  சமீபத்திய ஞபாகத்தால்  அனைத்தும்  இளவவேனிற்காலத்திற்காக  காத்திருக்கின்றன  கண்மணி  உன் மனத்தை  துயில் எழுப்பு  கவிதையாய்  காதல் செய்து  நம் கதகதப்பை  காற்றில் கரைப்போம்  இளைகள் துளிர்க்க  பூக்கள் மலர  ஒடுங்கிய உடல்கள் மீள  உயிரோட்டம் மீண்டும்  துவங்க  அறிவிப்போம்  இளவவேனிற்காலத்தை  வா.. கண்மணி  உன் மனத்தை  துயில் எழுப்பு 

ஸ்லோவாக்கியா

Image
குளிர்கால விடுமுறைக்கு குருவியும் அணிலும் சென்றுவிட‌ முதன்மைப்பெற்ற இலையில்லா மரங்கள் குறுநகையுடன் ஊரெங்கும் வெளியிட இயலாததால் ரோட்டோர மதில் சுவரே ஒவியக்கூடமாக்கி பொதுவில் படைத்தான்   தவராமல் காப்பி கோப்பையிலும் ஒவியம் கலைஞன் மனது மறிப்பதில்லை.. கம்யூனிஷத்தின் எச்சமாய் தீப்பெட்டியாய் அடுக்கிய‌ கட்டட‌ங்கள் அழகும் கலையும் இரட்டை குழ ந்தைகள் தொலைத்ததாலோ மறணித்தது கம்யூனிஷம்? வாங்கிய சுதந்திரத்தை மதுவாய் புகையாய் செலவழித்தப்படி சிலர் ந‌ல்மாற்றத்தை உணரமால் ஏற்க்காமல் கடந்தகால பசுமை நினைவில் சிலர் இயந்திரம்தான் வெறுமை வனாந்திரதிலேயே சலனத்துடன் இருந்த்தானால் உயிருடன் இருந்தது பின் காமிராவில் சடலமாய் நதியை பருகி  மகிழ பொறியாளனும்  கவிஞ்னும்  சேர்ந்து அமைத்த  பாலம்  மகிழ்சுவை அறிய  இயலாமல்  'மகிழ்வுந்தி' யில்  நான்  உயிரோவியத்தை நினைவாய் மீள்கவிதை வரைய‌ தேயிலை பெட்டியாய் என் பெட்டியில் படம் பார்த்து வாங

தேவதைகளும் நானும்..

Image
தேவதைகளும்   நானும் .. சந்தனத்தில் கொஞ்சமாய் ம‌ஞ்சல் கலந்த நிறத்தில் தேகம் சூரிய ஒளியிலேயே ஜொலிப்பார்கள் இந்த தேவதைகள் நிலா ஒளியில்  ஈர்ப்பார்கள்  இந்த தேவதைகள் அருகில் வரும்ப்போது விரும்பவும் திரும்பும்போது  ஈர்க்கவும் செய்தாள் ஒரு  தேவதை  நாஸ்தென்கா- வை அடிக்கடி நினைக்க‌வைத்தபடி ஒரு தேவதை  முழுமையாய் மறைத்தாலும் முழுதாய் ஆட்கொண்டபடி ஒரு தேவதை  பெயர் கேட்க‌ ஏன் கேட்கிறாய் என் அறுத்தாள் ஒரு தேவதை  மனம் வாடியதுஆனாலும் என்ன‌ துளிர்த்து மீண்டும் துனையாய் நின்ற மற்றொரு தேவதை  மொழி தெரியாதது  பாக்கியமாய் கண்களாளேயே பேசிய  ஒரு தேவதை   எங்கோ பாத்த சாயல் யோசித்தே களைக்க செய்தாள் ஒரு தேவதை  இறகில்லா தேவதைகள் இறகை முளைக்க வைத்தும் கவிதையை விதைத்தும் பூக்களை அழைத்துவர ஆசையிருந்தும் வண்ணத்தையும் வாசனையையும் மனதில் ஊற்றியபடி பெட்டியாய் இழுத்து  வந்தேன்  மனதை ...

பணி அறை

Image
பணி அறை  தானியங்கி  கதவு வெளித்தொடர்பை  அறுத்ததும் என்னை விழுங்கியது பணி நிற்க... அவ்வப்போது சில பட்டாம்பூச்சிகள் சிறகடித்தும் இமை சிமிட்டியும் பணியை பனியாய் விலக்க .. தேவதைகளின் பாதம் பிரிகையில் தரையில் மலர்கள் துளிர்க்க மலர் தன் இயல்பாய் மகரந்தத்தை காற்றில் கலக்க .. பூஞ்சோலை  நறுமணம் கான்கிரிட்  இளகி செடிகள் துளிக்க... இயற்கை தன் சக்தியை மீண்டும் பெற.. பணியரையாய் இருந்தது ஆனது கண்கொள்ளா தோட்டமாய்

வெறுமை

Image
வெறுமை   நீ இல்லாததை நதியும் தனித்தனியான மரங்களும் பெருந்திரலான நட்சத்திரங்களும் குளிர் நிலவும் இறகில்லா தேவதைகளும்  சேர்ந்து எனை  ஆனந்தப்படுத்த‌ முயன்றும் தோல்விதான்   புதிதுபுதிதாய் ரசனையாய் பல அருகில் இருந்தும் இருப்பது இல்லாததை உண்ர்த்துவது புதிர்தான் வெறுமை ஒளித்தது என்னையும் என் தேவதையையும்      நான்   பார்க்கும் அதே நிலவை தான்  நீயும் பார்க்கிறாய் என நினைத்ததும்       தூரம் மறைந்தது  துள்ளல் சேர்ந்ததது நடையில்

உன் அருகாமை !

Image
உன் அருகாமை ! சில நொடிகள்தான் ஆனாலும் சர்க்கரை சேர்க்கப்பதற்க்காக‌ உன் அருகாமையை இழ‌க்க மனமில்லாமல் சேகரித்த‌தால்.. கடுங்காப்பியே தித்தித்தது இக்கணத்தை உணர்ந்தபடியே அவளுடன் அவளையும் அருந்தியதால்

புதிய பூமியாய்...

Image
வண்ணங்களும் வாசனைகளும் நில ஓவியங்களும் என் எண்ணங்களும் கலந்து புதிய பூமியாய் ஸ்லோவாக்கிய‌   வானத்தையும் மேகத்தையும்   சூரியனையும் நிலவையும் கண்டுணர்ந்து மனம் குதுகளித்து நட்ச்சத்திரங்களாய் நியூரான்களை பிரசவித்தால் ஒளிர்ந்தது முகம்

ரசனை

Image

மூன்றாம் பிறை

Image
மூன்றாம் பிறை விசித்திரமானது என் உலகம் தட்டையானது இரவும் பகலும் கணிதத்தில் அடங்கா என் இரவுகள் ..     சில நொடிகளில்     சில நிமிடத்தில்     சில நினைவுகளின் நீளத்திலும்     சில எனைமறக்கும் வரை     ஆயுள்வரை நீழும் இரவுக்கும் வாய்ப்புண்டு இரவும் பகலும் கணிதத்தில் அடங்கா இன்று, என்முன் நிலவு உன்னை அறிந்திருக்கிறேன் கண்டதில்லை என்றேன் காதல் தோய்த்த கண்கள் எனை ஈர்க்கும் அதுசரி என்முன் எப்படி ரசிக்கின்றேன் உன்னை நீ அறியாததை அறியாததே தேடலின் சக்தி சக்தியே காதலின் ஜீவன் உன்னை முழுமையாய் காண அவா நான் நித்தமும் வளர்வேன் வளர்ந்ததும் தேய்வேன் பின் வளர்வேன் ஏன் இப்படி நான் அப்படித்தான் இப்போது வளர்கிறேன் நீ காண வாய்ப்புண்டு என மறைந்தது மூன்றாம் பிறை இன்று விசித்திரமானது என் உலகம் தட்டையானது இரவும் பகலும் கணிதத்தில் அடங்கா இந்த இரவு என் ஆயுள்வரை நீளாதிருக்க கடவ‌

தீபமும்...

Image
தீபமும் திரைச்சேலையும் உரையாடி உரையாடி உறவாட நினைக்கையில் நுன்நொடி தூரத்தில் தீண்டல் விழித்தது மனங்கள் தன்னையிழக்காமல் ஒளியும் புது உயிரும் இல்லையென‌ தீபமும் துளிஅளவு மட்டும் இழக்க தெரியாம‌லும் இழந்தால் உயிர்ப்பிக்க‌ இயலாததாலும் சலனமில்லாமல் திரையும் தீபமும் பிழைத்தது காடு மரணித்தது காதல்

இரவும் நிலவும்

Image
இரவும் நிலவும் இரவும் நிலவும் சேர் ந்து எழுதிய கவிதை ஏரியில் வெள்ளி மேலாடை

உயிரோவியம் 2

Image
கண்களால் விரல்களால் இதழ்களால் மனங்களால் தீண்டித் தீண்டி வேள்வி வளர்த்து தயங்கியும் தடுமாறியும் போதித்தும் மோகித்தும் கிறங்கியும் மயங்கியும் முயங்கியும் பனித்துளி விழுங்க மெய் கொதிக்க‌ கனல் கங்கு பருக தேகம் உறைய‌ இதழ் பிரித்தும் விரித்தும் தேடித்ததுலாவியும் அமிழ்து உமிழ்தும் கண்களால் விரல்களால் இதழ்களால் மனங்களால் தீண்டித் தீண்டி வேள்வி வளர்த்து வளர்த்த வேள்வியில் உருகி உருகியதை சிற்பமாக்கி சிற்பத்திற்கு உயிர‌ளித்து உயிரளித்தை ஓடையில் மிதக்க வைத்து மிதந்தது  உயிரோவியமாய் மோட்சம் அடைந்ததும் மனதிரல்களை சிதரவிட்டும் சிதரவிட்டதை சேகரித்தும் சேக‌ரித்ததை சேமித்தும் சேமித்ததை செலவழிக்க‌ மனமில்லாமல் தூவானமாய் அனைத்தபடி சில நாழிகைகள் எழ மனமில்லாமல் தழுவி பிரிந்தாலும்  மரணமில்லா நினைவுகளுடன்

வேண்டா வேண்டுமென‌

Image
வேண்டா வேண்டுமென‌ வேண்டுது மனம் அறியாததும் கற்ப்பதும் கற்ப்பிப்பதும் பூ, காய், பழம், விதை, மரம், பூ முடிவிலி முகர் ந்தால் மூச்சுமுட்டும் தொட்டால் மலரும் ஸ்பரிசத்தை ரசிக்கும் கந்தக மலர் விட்டுவிட்டு மத்தாப்பு பொறிக்கும் நீ அளவிளாவும் நேரம் வேண்டா வேண்டுமென‌ வேண்டுது மனம்

எதை சொல்ல

Image
உள்ளத்தை திறக்கும் திறவுக்கோலுடன் நீ எதை சொல்ல எதைவிட‌ ஏக்கங்கள் விக்கி தவித்தையா உணர்வுகள் உள்வாங்கினதையா ஜோடி நிலவு தேடி களைத்ததையா கதவிடுக்கில் சிக்கிய விரலாய் சுயமிலந்தையா பயன்படுத்தா சிமென்ட்டாய் இறுகி கிடந்ததையா முத்துத்தெடுக்க திறனிரு ந்தும் கரையொதிங்கிய சிப்பி சேகரித்ததையா இல்லை... நேற்றைய இரவு மழையில் புதுவாழ்வு பெற்ற‌ புல்வெளியை மனதில் சிலாகித்தையா இல்லை இனிவரும் கார்காலத்தில் மலரும் பூக்களை ரசிக்க போவதையா எதை சொல்ல எதைவிட‌

உயிரோவியம்...

Image
உயிரோவியம்... உன் விழிகள் கேட்டும் கவி வராவிட்டால் எப்படி மழை மேகத்திற்க்காக காத்திருத்த‌ முன்னால் நதி  தன்னுள்ளேயே நீரூற்றை கண்டதுபோல‌ நீ என் அருகிலும் நெருக்காமாய் மனதிலும் இதழ் வரிகள் பிரதி எடுத்து படுக்கை விரிப்பும் விழி கருமை எடுத்து இரவு செய்து காதனி கல் நிலவுக்கு ஜோடியாய் அனுப்பியும் கன்னக்கதுப்பினை மயில் இறகால் ஒத்தி எடுத்து தலையனையும் இதற்குமேலும் எதையும் உன்னில் வீணாக்க விரும்பாம்மல் மழையும் செம்மண்னும் போல‌ காமமும் காதலும் கலந்து விதை முளைக்க பன்நிலம் தேடி... மின்னல்  தாக்கி இறந்தவர் உண்டு நீயும்  நானும் மரமும்  நிலமுமாய்  ஆனதால் பிழைத்தனன் நான் சாகாவரமும் மறுபிறவியும் பெற்று நினைஓடையில் நனைந்து பின் உணர்வுப்பெற்று மீண்டும் உயிரோவியம் வார்க்க‌ மனம் இதழ் வரிகள் பிரதி எடுக்க...