தேவதைகளும் நானும்..
தேவதைகளும் நானும்..
சந்தனத்தில் கொஞ்சமாய்
மஞ்சல் கலந்த நிறத்தில் தேகம்
சூரிய ஒளியிலேயே
ஜொலிப்பார்கள் இந்த தேவதைகள்
நிலா ஒளியில்
ஈர்ப்பார்கள் இந்த தேவதைகள்
அருகில் வரும்ப்போது விரும்பவும்
திரும்பும்போது ஈர்க்கவும்
செய்தாள் ஒரு தேவதை

நாஸ்தென்கா- வை
அடிக்கடி நினைக்கவைத்தபடி
ஒரு தேவதை
முழுமையாய்
மறைத்தாலும்
முழுதாய்
ஆட்கொண்டபடி ஒரு தேவதை
பெயர் கேட்க
ஏன் கேட்கிறாய்
என் அறுத்தாள் ஒரு தேவதை
மனம் வாடியதுஆனாலும் என்ன
துளிர்த்து மீண்டும்
துனையாய் நின்ற மற்றொரு தேவதை

பாக்கியமாய்
கண்களாளேயே பேசிய ஒரு தேவதை
எங்கோ பாத்த சாயல்
யோசித்தே களைக்க
செய்தாள் ஒரு தேவதை
இறகில்லா தேவதைகள்
இறகை முளைக்க வைத்தும்
கவிதையை விதைத்தும்
பூக்களை அழைத்துவர ஆசையிருந்தும்
வண்ணத்தையும் வாசனையையும்
மனதில் ஊற்றியபடி
பெட்டியாய் இழுத்து
வந்தேன்
மனதை ...
Comments
Post a Comment