Posts

Showing posts from November, 2009

இருட்டு

Image
இருட்டு அதிர்வாய் விழியின் வேலை நிறுத்தத்தால் இரட்டிப்பாக்குவாய் வேலை பளுவை செவிக்கு தொலைந்து போகும் உன் முகமூடி மௌனத்தின் வலிமை அறிவாய் தூங்க நினைத்தால் நீ மனிதன் காதலியுடன் தூங்க நினைத்தால் நீ உயிர்ப்புள்ள மனிதன் காதலியை அனைத்தபடி நட்சத்திரங்களுடன் பேச நினைத்தால் நீ .... வார்த்தை தேவையில்லை வாழ்க்கையை அறிந் த‌வன் நீ.

தேவதை

Image
தேவதை! எதற்கு வந்திருக்கிறாய் என அறிவேன் அதற்கு முன் ஏன் எப்போதும் வெள்ளை உடை? ஏன் உன்னைச்சுற்றி புகை? உறவு பிறிந்திருக்கிறாயா? இரத்தம் பார்த்திருக்கிறாயா? தேவதையே அழுதிருக்கிறாயா? உனக்கு பசிக்குமா? ..... உனக்கு பதிலாவது தெரியுமா? அதெல்லாம் விடு வரம் கேள் தருகிறேன்: வரம் ஏதும் வேண்டாமெனக்கு 'தூங்க' விடு

உரமிட்டவர்கள்

Image
உரமிட்டவர்கள்... எல்லோரையும் இங்கே பதிவிட‌ இயலாது எனினும் 'ரமேஷ்' எனும் கன்று வளர‌ உரமிட்டவர்கள் இவர்கள் ஆறாம் வகுப்பு திரு. துரைச்சாமி (பிசப் ஹீபர் பள்ளி‍‍(புத்தூர்), திருச்சி) ஆசிரியர் பதினொன்றாம் வகுப்பு திரு. முஜ்புல் கான் (பிசப் ஹீபர் பள்ளி‍‍(புத்தூர்), திருச்சி) விலங்கியல் ஆசிரியர் க‌ல்லூரி திரு. முக‌ம‌து இஸ்மாயில் (ஜமால் முக‌ம‌து க‌ல்லூரி ,திருச்சி) க‌ணித‌ பேராசிரிய‌ர் மற்றும் திரு. பால‌சுப்பிர‌ம‌ணிய‌ன் பேச்சு மற்றும் மொழி மருத்தவ வல்லுனர் இவர்கள் என்னிடம் கனி மட்டுமல்ல‌ நிழலையும் எதிர்ப்பார்க்காதவர்கள் 'ந‌ன்றி' எனும் காற்றில் க‌ரையும் ச‌த்த‌ம் எழுப்ப விருப்ப‌மில்லை என் பெய‌ரும் சில‌ரின் உரமிட்டவர்கள் ப‌ட்டிய‌லில் சேர்க்க‌ உறுதியான‌ விருப்ப‌முண்டு

தவறு

தவறு தவறின் பதில் தவறென்றால் 'சரி' எதற்கு?