Posts

Showing posts from April, 2016

மீள் கவிதை

Image
மீள் கவிதை காலம் உருள நம் காதலை போலவே தானே வளர்ந்தது நாம் நட்ட மாஞ்செடியும் கூடவே 'குடும்ப ' பொறுப்பு கட்டிய தடுப்பு சுவரும் ஜீவநதியாய் நினைவுகள் தளும்ப கரை உடைக்க வழிவிட்டது விழி கரம்  கோர்க்க பண்பாட்டு தடுக்க மிக சுதந்திரமாக கைகோர்த்தபடி நம் நிழல்கள்

தோழி

Image
நான் அறிந்தவரையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் நீ என்னுடன் எப்பொழுதும் வானமும் மேகமும் போல தினம் ஒருமாதிரி நான் காணாதபோதும் நீ எனை காண்பதறிவேன் பகலில் ஆன்மாவாய் இரவில் குளிர்ச்சியாய் ஜன்னல் திறந்தால் மொட்டை மாடியில் தென்னைமரத்தின் மேல் மற்றும் வழித்துணையாய் எப்பயணத்திலும் என் முற்றத்தில் இருந்து  உன்னை வீட்டுக்குள்  அழைத்துவர தந்திரம்  செய்தாலோலிய  வாய்ப்பில்லை உன்னை தேடி சோர்ந்த இரவுகள் உண்டு உன் இருப்பை அறிவேன் கள்ளசிரிப்பையும் அறிவேன் எனக்கே எனக்கானவள் அல்ல இரத்தமும் சதையால் ஆனவளும் அல்ல இரவும் பகலும் கனவும் கவிதையும் மனமும் உணர்வும் சேர்த்து சேர்த்து எனக்கே எனக்கான நானே உருவாக்கிய பிம்பம் ஆர்டிக் பழங்குடியினரின் நம்பிக்கைப்போல் இறுதியில் என் ஆன்மா உன்னிடம் வந்தடையும் நிலா தோழி !

என்னுடன் நீ

Image
என்னுடன் நீ தணலாய் பூமி நம் மனதில் மட்டும் மழைச்சாரல் நம் காலத்தை உடல் வெம்மை தின்னாமல் இருக்க வெட்கை  தனித்தபடி தங்களுக்குள் கீச்சிய தென்னங்க்கீற்று சிலுசிலுத்து கொண்டிருந்தது சலனமில்லாமல் நம்மை ஆசையாய் ரசித்தபடி கொல்லைப்புறத்து காய்த்த மாமரம் தோழமையின்  உணர்வு உந்த நம் முகத்தில் வெண்மையாய் ஒளிர்ந்தது வெண்நிலவு உணர்வற்றவை என அறியப்பட்டவை எல்லாம் உணர்ந்து மௌனிக்க உணர்வுள்ள நாம் வெளிப்படுத்த இயலாமல் மௌனமாக மௌனம் மனதை பிளக்க மூன்றாம் மனித வார்த்தைகள் பரிமாற்ற மனதுள் பேசாதவைகளும் பேசக் கூடாதவைகளும் கடல் அலைகளாய் கடலில் சிறுதுளிதான் படகு வாழ்க்கை கடலில் சிறுதுளிதான் இந்த நிகழ்வு வாழ்க்கை கரை சேருமுன் ஆயிரம் முழுநிலவு மிதந்தபடி காணும் இந்த படகு வேறென்ன அபூர்வமாய் சில நிமிடங்கள் என்னுடன் நீ ..

வலி

Image
  வலி வேருரோருவரின் உரிமையாய் கண்ணாடி பெட்டியில் எனக்காக தயாரித்த .... துளி அதிகமாய் வெளியேற்றியது இதயம்