தோழி

நான் அறிந்தவரையில்
கண்ணுக்கெட்டிய தூரத்தில்
நீ என்னுடன் எப்பொழுதும்

வானமும் மேகமும் போல
தினம் ஒருமாதிரி

நான் காணாதபோதும்
நீ எனை காண்பதறிவேன்

பகலில் ஆன்மாவாய்
இரவில் குளிர்ச்சியாய்
ஜன்னல் திறந்தால்
மொட்டை மாடியில்
தென்னைமரத்தின் மேல்

மற்றும்
வழித்துணையாய் எப்பயணத்திலும்

என் முற்றத்தில் இருந்து 
உன்னை வீட்டுக்குள் 
அழைத்துவர தந்திரம் 
செய்தாலோலிய 
வாய்ப்பில்லை

உன்னை தேடி சோர்ந்த
இரவுகள் உண்டு

உன் இருப்பை அறிவேன்
கள்ளசிரிப்பையும் அறிவேன்

எனக்கே
எனக்கானவள் அல்ல
இரத்தமும் சதையால்
ஆனவளும் அல்ல

இரவும் பகலும்
கனவும் கவிதையும்
மனமும் உணர்வும்
சேர்த்து சேர்த்து
எனக்கே எனக்கான
நானே உருவாக்கிய
பிம்பம்

ஆர்டிக் பழங்குடியினரின்
நம்பிக்கைப்போல்
இறுதியில்
என் ஆன்மா
உன்னிடம்
வந்தடையும்

நிலா தோழி !


Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..