மாய நதி

மாய நதி

பல காலம்
புதைந்திருந்த
விதை
உன் கண் கண்டு
விரிந்து துளிர்த்து
சட்டென பூத்தது

மண்ணின் நிறத்தை
மழை பெரும்
மனதின் நிறத்தை
கண்ணீர் பெரும்

கண் காணா கண்ணீர்
மாய நதியாய்

நதிக்குள்
ஒலி இல்லா ஓசை
உன் மெச்சங்களாய்
கடலில் கலந்திருக்கலாம்

அலை திரும்பி வரும் போது
அதன் நுரைத் துளிகளில்
நம் நினைவுகள்
நிலவொளி பூசிக்கொண்டு
மீண்டும் கரையைத் தேடும்

கரை நனைந்தாலும்
கற்கள் சொல்லாத ரகசியம்
நதியோடு ஓடிக் கொண்டே இருக்கும்

நீ அறியாமல் விட்ட
ஒரு சொல்
என் உள்ளத்தின்
ஆழிக் குழியில்
சுழித்துக் கொண்டிருக்கும்

பார்வை தாண்டிய தூரத்தில்
பெருகி ஓடும் 

மாய நதி


** Map of Memory, Hudson River (2018). Graphite and walnut ink on paper. ©Lin, 2018. Courtesy of the artist and Hudson River Museum. Photography by Kris Graves.



Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

வினோதன்