உரமிட்டவர்கள்

உரமிட்டவர்கள்...

எல்லோரையும்
இங்கே பதிவிட‌
இயலாது

எனினும்
'ரமேஷ்' எனும்
கன்று வளர‌
உரமிட்டவர்கள்
இவர்கள்

ஆறாம் வகுப்பு
திரு. துரைச்சாமி (பிசப் ஹீபர் பள்ளி‍‍(புத்தூர்), திருச்சி)
ஆசிரியர்

பதினொன்றாம் வகுப்பு
திரு. முஜ்புல் கான் (பிசப் ஹீபர் பள்ளி‍‍(புத்தூர்), திருச்சி)
விலங்கியல் ஆசிரியர்

க‌ல்லூரி
திரு. முக‌ம‌து இஸ்மாயில் (ஜமால் முக‌ம‌து க‌ல்லூரி ,திருச்சி)
க‌ணித‌ பேராசிரிய‌ர்

மற்றும்
திரு. பால‌சுப்பிர‌ம‌ணிய‌ன்
பேச்சு மற்றும் மொழி மருத்தவ வல்லுனர்

இவர்கள் என்னிடம்
கனி மட்டுமல்ல‌
நிழலையும்
எதிர்ப்பார்க்காதவர்கள்

'ந‌ன்றி' எனும்
காற்றில் க‌ரையும்
ச‌த்த‌ம் எழுப்ப
விருப்ப‌மில்லை

என் பெய‌ரும்
சில‌ரின் உரமிட்டவர்கள்
ப‌ட்டிய‌லில் சேர்க்க‌
உறுதியான‌ விருப்ப‌முண்டு

Comments