Posts

Showing posts from August, 2016

தேனீக்கள்

Image
தேன் எடுப்பது மட்டுமே எங்கள் ஒரே வேலை ஓய்வு என்பதே என்னவென்றே அறிந்திருக்காமல் காலங்காலமாய் ஏதோ வாழ்ந்திருந்தோம் வீடுகட்ட இடம் பார்க்க உடலை உருக்கி மெழுகு உமிழ பகைவரிடம் இருந்து உடைமை காக்க என எதுவும் தேவையில்லை இனி காலம் முன்னேறிவிட்டது வீடு ஏற்கனவே தயாராய் மெழுகுகால் ஆனா விசாலமான ஏராளமான அறைகள் உடன் கண்ணுக்கு எட்டியவரை பகைவர்களில்லை தேன் எடுப்பது மட்டுமே எங்கள் ஒரே வேலை காலம் முன்னேறிவிட்டது என ஆனந்த கூத்தாடின எதற்காக தேன் எடுக்கறோம் என்று  மறந்தே போன தேனீக்கள் !

சினிமா பாரடைசோ

Image
இளவரசி மீது கண்டதும் காதல் கொண்டான் சேவகன் தலை துண்டிக்க வாய்ப்பிருந்தும் தன் காதலை தெரியவும் படுத்தினான் ஆண்மகனாய் ஆண்மையை துணிவை காதலை விரும்பினாள்  இளம்  பெண்ணாய் நான் உன்னவள்  நீ எனக்காக  100 நாட்கள்  என்னை பாதுகாத்தால்   என் சாரளத்திற்கு  வெளியே  நின்று  தினமும் கிடைக்கும்  அவளின்  தரிசனமும்  பார்வையும்  புன்சிரிப்பும்  சக்தி கொடுக்க  வெயில்  பனைமரத்தை  சாய்க்கும்  புயல்  பார்வை அழிக்கும் புழுதி  உருக்கும் கொடும்  குளிர்  கடந்தான் 99 நாட்களை  கடைசி நாள்  அந்த இடத்தை விட்டு  சென்றான்  (ஏன் என்று எனக்கும்  தெரியவில்லை) **சினிமா பாரடைசோ என்ற இத்தாலியன் திரைப்படத்திலிருந்து  

உயிருடன்

Image
இயந்திரம்தான் ஆனாலும்  வெறுமை வனாந்திரதிலேயே சலனத்துடன் இருந்த்தானால் உயிருடன் இருந்தது பின் காமிராவில் சடலமாய்

நம்பிக்கை !

Image
காய்ந்த குச்சி என நினைத்தது அருகில் சென்றதும் தலை தூக்கியது !! ஐயகோ !  ஈசா !!

ஓவியனை தேடி.. 3

Image
முந்தய பதிவுகள்  ஓவியனை தேடி...1 ஓவியனை தேடி...2 மனம் துளி துளியாய் சேந்தது அவனை தேடும் வழியில் கிட்டிய அனுபவத்தை நித்தம் புது புது அனுபவங்கள் தேட எண்ணம் தோன்றியது முதல் கடவுளாய் வேடமிட்டவருடன் சிறுநகையுடன்  பயணம் பலபேர் எனை கண்ட பாவனை துளியும் இல்லாமலும் என் தேடலை அறியாமலும் கடந்தனர் நாடக மாந்தர்கள் சாலையை கடக்கும் படகை  கண்டுவியந்தேன் ஓவியம் உயிர் பெற்று கண்முன் வர விரிந்த்து விழி திருடனுடன் சென்று விதியை களவாடிதை கேட்டரிந்தேன் மனமும் சோர்வில்லாமல் துளி துளியாய் சேந்தது அனுபவத்தை கூடவே ஓயா கேள்வி என்னுள் எதை அல்லது யாரை எதற்க்காக தேடுகிறேனென இறுதியில் அவனை என்னை இவ்விடம் வரை ஈர்த்துக்கொண்டு வந்தவனை கண்டேன்... ஓவியனை நேரில் காண பதிலளித்தேன் ஏன் என்ற கேள்விக்கு அவைகள் அங்கேதான் எப்போதும் இருந்தன நானும் உன்னை போலவே நானும் துலங்கினேன் அவ்வளவே ஆனால் உன்னைப்போல் அவனை தேடநினைக்கவில்லை அவைகளை என்னைப்போல் ஒருவனே படைத்திருப்பான்னென மீண்டும் தனியானேன் ஏன் நான் ஓவியனை தேடினேன்? தேடலில் எனக்கு கண்கள் இரண்டுக்குமேல்

சாரா நிலை

Image
ஆயிரம் வெள்ளைப்புள்ளிகள் சேர்ந்து இருந்தாலும் காண்பதென்னவோ ஒரே ஒரு கரும்புள்ளி !

எதிரொலி

Image
மாலை திரும்பிவந்து திறக்கும் வரை காலையில் கோபமாய் கதவை சாத்திய சத்தம் எதிரொலித்துக்கொண்டேயிருந்தது !

வண்ணத்துப்பூச்சி

Image
புல்வெளியில் இறந்து கிடக்கும் தும்பிகள் மின்கம்பத்தில் கூடு கட்டும் காக்கைகள் ஊரில் நுழைந்து பயிரை நாசமாக்கும் யானைகள் பைன் மரம்  தேடி களைத்து விழும் வண்ணத்துப்பூச்சிகள் கண்டு கேட்டு படித்து உணர்ந்தவர்கள் உலக பிரசித்திபெற்ற "மலை" பிரதேசத்தில் புகைப்படத்தில் மட்டும் பதிவு செய்யும் ஆர்வத்தில் தேனிக்கள்  குழுவாய்

பிச்சைக்காரன்

Image
கூச்ச உணர்வு சிறிதும்மின்றி பிச்சை கேட்ப்பான் கிடைத்ததும் கொடுத்தவனுக்கே பங்கும் கொடுப்பான் பிச்சை கேட்டுவிட்டு வெளியே வந்தவுடன் பிச்சை போடுவான் விசித்திரமான பிச்சைக்காரன் !

மிருதன்

Image
பெண்னை உறவு கொண்டு கொன்றும் இயற்கையை கண்டு கொண்டு கொன்றும் ஆனந்த கூத்தாடி போட்டுடைக்க ஆளபிறந்தவன் மிருதன் !!!

அன்பு

Image
இடைவிடா தழுவலில் கூழாங் கல்லாய் ஆனது பாறை