ஓவியனை தேடி.. 3


முந்தய பதிவுகள் 
ஓவியனை தேடி...1
ஓவியனை தேடி...2


மனம்
துளி துளியாய்
சேந்தது
அவனை
தேடும் வழியில் கிட்டிய
அனுபவத்தை

நித்தம் புது புது அனுபவங்கள்
தேட எண்ணம் தோன்றியது முதல்

கடவுளாய் வேடமிட்டவருடன்
சிறுநகையுடன்  பயணம்

பலபேர்
எனை கண்ட பாவனை
துளியும் இல்லாமலும்
என் தேடலை அறியாமலும்
கடந்தனர்
நாடக மாந்தர்கள்

சாலையை கடக்கும்
படகை  கண்டுவியந்தேன்

ஓவியம் உயிர் பெற்று
கண்முன் வர விரிந்த்து விழி

திருடனுடன் சென்று
விதியை களவாடிதை
கேட்டரிந்தேன்

மனமும் சோர்வில்லாமல்
துளி துளியாய்
சேந்தது
அனுபவத்தை

கூடவே ஓயா கேள்வி என்னுள்
எதை அல்லது யாரை
எதற்க்காக தேடுகிறேனென

இறுதியில்
அவனை

என்னை இவ்விடம் வரை
ஈர்த்துக்கொண்டு
வந்தவனை

கண்டேன்...

ஓவியனை நேரில் காண
பதிலளித்தேன்
ஏன் என்ற கேள்விக்கு

அவைகள் அங்கேதான்
எப்போதும் இருந்தன
நானும் உன்னை போலவே
நானும் துலங்கினேன்
அவ்வளவே

ஆனால் உன்னைப்போல்
அவனை தேடநினைக்கவில்லை
அவைகளை
என்னைப்போல் ஒருவனே
படைத்திருப்பான்னென

மீண்டும்
தனியானேன்

ஏன்
நான் ஓவியனை
தேடினேன்?

தேடலில்

எனக்கு கண்கள்
இரண்டுக்குமேல் இருப்பது
புரிந்தது

மனம் புதியவைகளை
செந்தது

ஆம்
அவைகளை
என்னைப்போல் ஒருவனே
படைத்திருக்கவேண்டும்
நம்பிக்கை வந்தது

அவனும் என்னுள்ளும் 
இருப்பான் என

இதற்குமேல் 
ஓவியனை தேடி
திரிந்ததற்கு
காரணம்

பிறகு புரியலாம் ...


* சேந்து-தல் :- கயிறு கட்டி  இழுத்தல்
*** இந்த ஓவியனை தேடி தொகுப்பு எழுத உந்து சக்தி சார்லி எனும் திரைப்படம் (முதல் ஒரு மணி நேரம் ).  பெரும்பாலும் திடைப்பட காட்சியை நான் புரிந்து கொண்டபடி தொகுத்திருக்கிறேன் . 

**சமீபத்தில் வந்த மிகசிறந்த கலை படைப்பு ,  ஒரு திரைப்படத்திற்கு கதையும் முடிவும் அவசியம் என்பதாலும் பரந்துபடட ரசிகர் குழுவினாலும் சமரசம் அவசியமே என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது ..












Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..