ஓவியங்கள்


ஓவியங்கள்
படிமங்கள்
கொண்டது
நிலையான படிமம்மீது
சலனப்படிமாய்
நித்தம் புதிதாய்
ஓவியங்கள்
மனம் கொள்ளும்
அளவு

ஓவியங்களில்
தானும் ஓர்
அங்கம் என
அறியாதோர்
ஓவியனை தேடியும்

தேடியவர்களை
அறிந்தோர்
ஓவியனை எம்மூலம்தான்
கண்டறிய
முடியும்மெனவும்

தேடியவர்களையும் ,
அவனை காண
அழைத்தவர்களையும்
ஆழ அறிந்தோர்
ஓவியனே தாமெனவும்

ஓவியங்களில்
தானும் ஓர்
அங்கம் என
அறிந்தோர்
தன்னுள் தேட
தேடலில்
மனமளவு
கண்கள்
என தெளிந்து
ரசிப்பர்
ஓவியங்களை !


Comments

  1. குட் பாராட்டுக்கள் ரமேஷ்

    ReplyDelete
  2. அருமை. பாராட்டுகள் ரமேஷ்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..