Posts

Showing posts from June, 2016

விழித்திருக்கிறேன்

Image
முன்பிறவி நினைத்து உறங்கி பால் விழித்தது தயிராய் .. உன் நிழல் நினைத்து மீதம் உள்ளதை வாழ உறங்கயியலாமல் விழித்திருக்கிறேன்

அருகில் நீ

Image
நிலாவும்  தொட்டுவிடும்  தூரம்தான்  அருகில்  நீ(ர் )

பாலைவனம்

Image
கொதிக்கும்  கந்தக பூமியின் மணற்சூட்டில் ஒரு சொட்டு நீர் தன்யுயிர் ஆவியாவதை ஒத்திவைக்கும் நிலையில் விரற்கடை* தூரத்தில் தண்ணீர் இருந்தும் ஆவியாய்  உயிர் .. திடுக்கென் விழித்தான் கனாவென்பதால் மகிழ்ந்து நன்றி சொல்ல தாம் கட்டமைத்த ஆழயம் உடனே சென்றான் 'மணி'தன் போகும் வழியில்  கொதிக்கும் கந்தக  நடைபாதை சிமெண்ட் சூட்டில்  பறவைக்குகூட உணவாக  இயலாமல் சிதறியபடி  உயிர்விட்ட புழுக்கள்  கவனமாய் ஒதுங்கி சென்றான்  உயர் அறிவை பெற்றதன் காரணம் அறியும் காலம் வரும்மென கனவையும் மனிதனையும் படைத்தவன்