சினிமா பாரடைசோ


இளவரசி மீது
கண்டதும் காதல்
கொண்டான்
சேவகன்

தலை துண்டிக்க
வாய்ப்பிருந்தும்
தன் காதலை
தெரியவும்
படுத்தினான்
ஆண்மகனாய்

ஆண்மையை
துணிவை
காதலை
விரும்பினாள் 
இளம் 
பெண்ணாய்
நான் உன்னவள் 
நீ எனக்காக 
100 நாட்கள் 
என்னை பாதுகாத்தால்  
என் சாரளத்திற்கு 
வெளியே 
நின்று 

தினமும் கிடைக்கும் 
அவளின் 
தரிசனமும் 
பார்வையும் 
புன்சிரிப்பும் 
சக்தி கொடுக்க 

வெயில் 
பனைமரத்தை  சாய்க்கும்  புயல் 
பார்வை அழிக்கும் புழுதி 
உருக்கும் கொடும்  குளிர் 
கடந்தான் 99 நாட்களை 

கடைசி நாள் 
அந்த இடத்தை விட்டு 
சென்றான் 


(ஏன் என்று எனக்கும் 
தெரியவில்லை)


**சினிமா பாரடைசோ என்ற இத்தாலியன் திரைப்படத்திலிருந்து 

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..