என்னுடன் நீ

என்னுடன் நீ


தணலாய் பூமி
நம் மனதில் மட்டும்
மழைச்சாரல்

நம் காலத்தை
உடல் வெம்மை
தின்னாமல் இருக்க
வெட்கை  தனித்தபடி
தங்களுக்குள் கீச்சிய
தென்னங்க்கீற்று

சிலுசிலுத்து கொண்டிருந்தது
சலனமில்லாமல் நம்மை
ஆசையாய் ரசித்தபடி
கொல்லைப்புறத்து
காய்த்த மாமரம்

தோழமையின்
 உணர்வு உந்த
நம் முகத்தில்
வெண்மையாய் ஒளிர்ந்தது
வெண்நிலவு

உணர்வற்றவை என
அறியப்பட்டவை எல்லாம்
உணர்ந்து மௌனிக்க

உணர்வுள்ள நாம்
வெளிப்படுத்த இயலாமல்
மௌனமாக

மௌனம் மனதை பிளக்க
மூன்றாம் மனித
வார்த்தைகள் பரிமாற்ற

மனதுள்
பேசாதவைகளும்
பேசக் கூடாதவைகளும்
கடல் அலைகளாய்

கடலில்
சிறுதுளிதான் படகு
வாழ்க்கை கடலில்
சிறுதுளிதான் இந்த நிகழ்வு

வாழ்க்கை
கரை சேருமுன்
ஆயிரம் முழுநிலவு
மிதந்தபடி காணும்
இந்த படகு

வேறென்ன
அபூர்வமாய்
சில நிமிடங்கள்
என்னுடன் நீ ..

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

வெறுமை