உயிரோவியம்...


உயிரோவியம்...

உன் விழிகள் கேட்டும்
கவி வராவிட்டால் எப்படி

மழை மேகத்திற்க்காக காத்திருத்த‌
முன்னால் நதி  தன்னுள்ளேயே
நீரூற்றை கண்டதுபோல‌

நீ என் அருகிலும்
நெருக்காமாய் மனதிலும்

இதழ் வரிகள் பிரதி
எடுத்து படுக்கை விரிப்பும்

விழி கருமை எடுத்து
இரவு செய்து

காதனி கல் நிலவுக்கு
ஜோடியாய் அனுப்பியும்

கன்னக்கதுப்பினை மயில் இறகால்
ஒத்தி எடுத்து தலையனையும்

இதற்குமேலும் எதையும் உன்னில்
வீணாக்க விரும்பாம்மல்

மழையும் செம்மண்னும் போல‌
காமமும் காதலும் கலந்து
விதை முளைக்க பன்நிலம்
தேடி...

மின்னல்  தாக்கி இறந்தவர் உண்டு
நீயும்  நானும்
மரமும்  நிலமுமாய்  ஆனதால்
பிழைத்தனன் நான்

சாகாவரமும்
மறுபிறவியும்
பெற்று
நினைஓடையில்
நனைந்து


பின் உணர்வுப்பெற்று
மீண்டும்
உயிரோவியம் வார்க்க‌
மனம்
இதழ் வரிகள் பிரதி எடுக்க...

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..