வெறுமை


வெறுமை 
நீ இல்லாததை
நதியும்
தனித்தனியான மரங்களும்
பெருந்திரலான நட்சத்திரங்களும்
குளிர் நிலவும்
இறகில்லா தேவதைகளும் 
சேர்ந்து எனை 
ஆனந்தப்படுத்த‌ முயன்றும்
தோல்விதான்  

புதிதுபுதிதாய் ரசனையாய்
பல அருகில் இருந்தும்
இருப்பது இல்லாததை
உண்ர்த்துவது புதிர்தான்

வெறுமை ஒளித்தது
என்னையும் என் தேவதையையும்
    
நான்   பார்க்கும் அதே நிலவை தான் 
நீயும் பார்க்கிறாய் என நினைத்ததும் 
    
தூரம் மறைந்தது 
துள்ளல் சேர்ந்ததது
நடையில்

Comments

  1. அற்புதமான கவிதை
    (தோல்வியை மட்டும் கவனிக்கவும் )

    ReplyDelete
    Replies
    1. நன்றி! தவறை சுட்டிக்காட்டியத‌ற்கும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..