எதை சொல்ல

உள்ளத்தை திறக்கும்
திறவுக்கோலுடன் நீ
எதை சொல்ல எதைவிட
ஏக்கங்கள் விக்கி தவித்தையா
உணர்வுகள் உள்வாங்கினதையா
ஜோடி நிலவு தேடி களைத்ததையா
கதவிடுக்கில் சிக்கிய விரலாய்
சுயமிலந்தையா
பயன்படுத்தா சிமென்ட்டாய்
இறுகி கிடந்ததையா
முத்துத்தெடுக்க திறனிரு ந்தும்
கரையொதிங்கிய சிப்பி
சேகரித்ததையா
இல்லை...
நேற்றைய
இரவு மழையில்
புதுவாழ்வு பெற்ற
புல்வெளியை
மனதில் சிலாகித்தையா
இல்லை
இனிவரும்
கார்காலத்தில்
மலரும் பூக்களை
ரசிக்க போவதையா
எதை சொல்ல எதைவிட
Comments
Post a Comment