உயிரோவியம் 2

கண்களால்
விரல்களால்
இதழ்களால்
மனங்களால்
தீண்டித் தீண்டி வேள்வி வளர்த்து


தயங்கியும் தடுமாறியும்
போதித்தும் மோகித்தும்
கிறங்கியும் மயங்கியும்
முயங்கியும்

பனித்துளி விழுங்க
மெய் கொதிக்க‌

கனல் கங்கு பருக
தேகம் உறைய‌

இதழ் பிரித்தும் விரித்தும்
தேடித்ததுலாவியும்
அமிழ்து உமிழ்தும்

கண்களால்
விரல்களால்
இதழ்களால்
மனங்களால்
தீண்டித் தீண்டி வேள்வி வளர்த்து

வளர்த்த வேள்வியில் உருகி
உருகியதை சிற்பமாக்கி
சிற்பத்திற்கு உயிர‌ளித்து
உயிரளித்தை ஓடையில் மிதக்க வைத்து
மிதந்தது  உயிரோவியமாய்
மோட்சம் அடைந்ததும்

மனதிரல்களை சிதரவிட்டும்
சிதரவிட்டதை சேகரித்தும்
சேக‌ரித்ததை சேமித்தும்
சேமித்ததை செலவழிக்க‌
மனமில்லாமல்

தூவானமாய் அனைத்தபடி
சில நாழிகைகள்

எழ மனமில்லாமல்
தழுவி பிரிந்தாலும்
 மரணமில்லா நினைவுகளுடன்




Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..