ஸ்லோவாக்கியா



குளிர்கால விடுமுறைக்கு
குருவியும் அணிலும் சென்றுவிட‌
முதன்மைப்பெற்ற
இலையில்லா மரங்கள்
குறுநகையுடன்
ஊரெங்கும்





வெளியிட இயலாததால்
ரோட்டோர மதில் சுவரே
ஒவியக்கூடமாக்கி
பொதுவில் படைத்தான்

 தவராமல் காப்பி
கோப்பையிலும் ஒவியம்

கலைஞன் மனது
மறிப்பதில்லை..













கம்யூனிஷத்தின்
எச்சமாய்
தீப்பெட்டியாய் அடுக்கிய‌
கட்டட‌ங்கள்

அழகும் கலையும்
இரட்டை குழ ந்தைகள்
தொலைத்ததாலோ

மறணித்தது
கம்யூனிஷம்?

வாங்கிய
சுதந்திரத்தை
மதுவாய்
புகையாய்
செலவழித்தப்படி சிலர்


ந‌ல்மாற்றத்தை
உணரமால்
ஏற்க்காமல்
கடந்தகால பசுமை
நினைவில் சிலர்



இயந்திரம்தான்
வெறுமை வனாந்திரதிலேயே
சலனத்துடன் இருந்த்தானால்
உயிருடன் இருந்தது
பின் காமிராவில்
சடலமாய்


















நதியை பருகி 
மகிழ
பொறியாளனும் 
கவிஞ்னும் 
சேர்ந்து அமைத்த 
பாலம் 
மகிழ்சுவை அறிய 
இயலாமல் 
'மகிழ்வுந்தி' யில் 
நான் 















உயிரோவியத்தை நினைவாய்
மீள்கவிதை வரைய‌
தேயிலை பெட்டியாய்
என் பெட்டியில்















படம் பார்த்து
வாங்கவும்
வழியில்லாமல்
விழி பதுங்க

ஆங்கில மெனு ..

அங்கிலத்தை
கேட்பதும்
பார்ப்பதும்
பரவசமாய்

எனைக்கேட்காமல்
தாய்மொழிக்கு பின்
இனைத்துகொண்டது
ஆங்கிலம்






உணவைவிட‌
அனுபவமே
நிறைத்தது
மனத்தையும்
பின்
வயிரையும்
எவ்வுணவும்
சுவைதான்
பசித்திருக்கையிலே

உறைந்த‌
நினைவு தேன்
துளிகளை மட்டும்
சேகரித்தது இவை

உறையாத‌
நினைவுகள்
ஏராளமாய்
என்னுள்ளே..




Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

வினோதன்