மூன்றாம் பிறை

மூன்றாம் பிறை

விசித்திரமானது என் உலகம்
தட்டையானது

இரவும் பகலும்
கணிதத்தில் அடங்கா

என் இரவுகள் ..
    சில நொடிகளில்
    சில நிமிடத்தில்
    சில நினைவுகளின் நீளத்திலும்
    சில எனைமறக்கும் வரை
    ஆயுள்வரை நீழும் இரவுக்கும்
வாய்ப்புண்டு

இரவும் பகலும்
கணிதத்தில் அடங்கா

இன்று,
என்முன் நிலவு

உன்னை அறிந்திருக்கிறேன்
கண்டதில்லை என்றேன்

காதல் தோய்த்த கண்கள்
எனை ஈர்க்கும்

அதுசரி என்முன் எப்படி

ரசிக்கின்றேன்
உன்னை நீ அறியாததை

அறியாததே தேடலின் சக்தி
சக்தியே காதலின் ஜீவன்

உன்னை முழுமையாய் காண அவா

நான் நித்தமும் வளர்வேன்
வளர்ந்ததும் தேய்வேன்
பின் வளர்வேன்

ஏன் இப்படி

நான் அப்படித்தான்
இப்போது வளர்கிறேன்
நீ காண வாய்ப்புண்டு
என மறைந்தது

மூன்றாம் பிறை இன்று

விசித்திரமானது என் உலகம்
தட்டையானது

இரவும் பகலும்
கணிதத்தில் அடங்கா

இந்த இரவு
என் ஆயுள்வரை
நீளாதிருக்க கடவ‌



Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..