காடு

காடு பாதி உயிர்களின் ஆதி படைத்தவன் ஆன்மா மிச்சமிருக்குமிடம் பூமித்தாயின் உயிர் வளர்க்கும் மார்பகங்கள் பல தளங்களில் உயிர் வாழ சமத்துவமாய் மனதில் மட்டுமல்ல உடலிலும் இடம் தரும் பிறர்க்காக அமுது சேகரித்து நதி நரம்பாய் ஜீவன் புகட்டும் தான்வாழ பிறர் நலன் அழிக்கும் சிலருக்கு பாடமாய் தன்னை தானே எரித்து உயிர்ப்பிக்கும் உயிர்கொடுக்கும் தாயின் மார்பை அறியாமல் கடித்துவிடும் குழந்தை உண்டுதான் மார்பகத்தையே உண்டு வாழ நினைக்கும் படைத்தவனை வெட்கப்பட வைத்தபடி ஒரே ஒரு குழந்தை தன் நிலையை மனதில் நொந்தபடி மௌனமாக காடு