தேனீக்கள்

தேன் எடுப்பது மட்டுமே எங்கள் ஒரே வேலை ஓய்வு என்பதே என்னவென்றே அறிந்திருக்காமல் காலங்காலமாய் ஏதோ வாழ்ந்திருந்தோம் வீடுகட்ட இடம் பார்க்க உடலை உருக்கி மெழுகு உமிழ பகைவரிடம் இருந்து உடைமை காக்க என எதுவும் தேவையில்லை இனி காலம் முன்னேறிவிட்டது வீடு ஏற்கனவே தயாராய் மெழுகுகால் ஆனா விசாலமான ஏராளமான அறைகள் உடன் கண்ணுக்கு எட்டியவரை பகைவர்களில்லை தேன் எடுப்பது மட்டுமே எங்கள் ஒரே வேலை காலம் முன்னேறிவிட்டது என ஆனந்த கூத்தாடின எதற்காக தேன் எடுக்கறோம் என்று மறந்தே போன தேனீக்கள் !