Posts

வரம்தான்

Image
அழகை ஆராதிக்கும் கண்களிலிருந்து விடுதலை இறகை பிடுங்கும் கரங்களிலிருந்து பாதுகாப்பு, கூண்டிலடைத்து “அன்பு” பெயரில் சிறை இல்லை. இருவழியிலும் கிடைத்ததை இரக்கம் கொண்டு பகிர்ந்துண்ணும் உறவுகள், கூடு கலைந்தாலும் கவலை இல்லை — மீண்டும் கலைக்க யாரும் வரமாட்டார்கள். விபத்து தவிர இயற்கையே முடிவை எழுதும், கண்காட்சிப் பெட்டியில் வைத்து காட்சிப் பொருளாக்க யாருக்கும் ஆசை இல்லை. ‘அமாவாசை’ மாதம் ஒருமுறை அழைத்து விருந்தளிக்கும் உலகம், செல்பி எடுத்து வலையில் பதிவிட யாரும் துரத்தமாட்டார்கள். “மொழி கொச்சை” என சிரிக்கும் போது கூட ரசிகர் தொல்லை இல்லை, அதிபுத்திசாலி கூட்டத்தின் நடுவில் இடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. வரம்தான். 

மாய நதி

Image
மாய நதி பல காலம் புதைந்திருந்த விதை உன் கண் கண்டு விரிந்து துளிர்த்து சட்டென பூத்தது மண்ணின் நிறத்தை மழை பெரும் மனதின் நிறத்தை கண்ணீர் பெரும் கண் காணா கண்ணீர் மாய நதியாய் நதிக்குள் ஒலி இல்லா ஓசை உன் மெச்சங்களாய் கடலில் கலந்திருக்கலாம் அலை திரும்பி வரும் போது அதன் நுரைத் துளிகளில் நம் நினைவுகள் நிலவொளி பூசிக்கொண்டு மீண்டும் கரையைத் தேடும் கரை நனைந்தாலும் கற்கள் சொல்லாத ரகசியம் நதியோடு ஓடிக் கொண்டே இருக்கும் நீ அறியாமல் விட்ட ஒரு சொல் என் உள்ளத்தின் ஆழிக் குழியில் சுழித்துக் கொண்டிருக்கும் பார்வை தாண்டிய தூரத்தில் பெருகி ஓடும்  மாய நதி ** Map of Memory, Hudson River  (2018). Graphite and walnut ink on paper. ©Lin, 2018. Courtesy of the artist and Hudson River Museum. Photography by Kris Graves.

ஓவியங்கள்

ஓவியங்கள் படிமங்கள் கொண்டது நிலையான படிமம்மீது சலனப்படிமாய் நித்தம் புதிதாய் ஓவியங்கள் மனம் கொள்ளும் அளவு ஓவியங்களில் தானும் ஓர் அங்கம் என அறியாதோர் ஓவியனை தேடியும் தேடியவர்களை அறிந்தோர் ஓவியனை எம்மூலம்தான் கண்டறிய முடியும்மெனவும் தேடியவர்களையும் , அவனை காண அழைத்தவர்களையும் ஆழ அறிந்தோர் ஓவியனே தாமெனவும் ஓவியங்களில் தானும் ஓர் அங்கம் என அறிந்தோர் தன்னுள் தேட தேடலில் மனமளவு கண்கள் என தெளிந்து ரசிப்பர் ஓவியங்களை !

இலக்கணப்பிழை

Image
மூச்சு காற்றும் பேசிய அன்பு மொழியும் வளி மண்டலத்தில் உள்ளவரை பிரிந்தோம் என்பது இலக்கணப்பிழை திறன்தான் இல்லை மீண்டும் சேர்க்க

வேடிக்கை

Image
தலைவனை வேடிக்கை பார்க்க காத்திருக்கும் மனித பெரும்சுவர்களுக்கு இடையே தன் கடமை கடல் சேர்வதே என சென்றது நதி

பேரன்புடன்

Image
சம நிலை வேண்டி பிரிந்தது மேகமாய் பின் புயலாய் அட்சய மழையாய் தன்னை சார்ந்த ஜீவன்களை வளமாக்கி உரு மாறி மாரி பின் நதியாய் விறைந்து கடல் சேரும் காதலால் கலந்திருந்த உப்பை கலக்க பேரன்புடன்!

வினோதன்

Image
பொறியில் இருந்துகொண்டுடே சிறு எலி தொந்தரவு  ஒழிக்க பொறி வைக்கும் ஆறறிவு வினோதன்