என்னுடையது என உரிமைகொண்டதும் உடன்படாமுடியாமல் உடன்பிறந்தவர்கள் சம உரிமை கோரினர் அவ்வப்போது அன்னையின் தலைமையில் உரிமை பகிர ஆணை பிறப்பிக்கப்படும் நடுவர் மன்றம் தான் ஆனாலும் தீர்ப்பு உடனே அமல்படுத்தப்படும் பிரதி (அ/) நியாயத்தினால் தாமதமானலும் பொறுமையாய் காத்திருந்திருக்கிறேன் கற்றும் கொண்டேன் காலம் கடந்ததும் காற்றிங்கிய பலூனாய் இறங்கியது மதிப்பு நான் முக்கியத்துவத்தை மாற்றியவுடன் கற்றும் கொண்டேன் என் உழைப்பில்லாத எதையும் உரிமை கோரலாகாது முக்கியமில்லாததெனவும் கற்றுக்கொண்டேன் உழைப்பும் உரிமையும் இருந்தாலும் காத்திருந்திருக்க எனக்கான வேளை வரும் என.. கற்றவை இன்றும் உரைக்கும் உரிமைகொள்ள பொறுமையாய் காத்திருக்க வேணும் எனக்கான வேளை வரும் என. என்னை வார்க்க உதவிய பல புத்தகங்கள் போலில்லாமல் நான் மட்டுமே படித்த புத்தகமாய் அமைதியாய் கிடந்தது மாமாங்கமாய் பயன்படுத்தாத என்னுடையது என கொண்ட 'பட்டை டம்ளர்' என அழைக்கப்பட்ட காபி டம்ளர்