ஓவியனை தேடி...1
அவள்(ன்)
ஓடத்தில் மிதந்துதான்
வந்து சேர்ந்தாள்(ன்)
புதிய வாழ்விடத்திற்கு
வீடு
இருளும் ஒளியும்
புறமும் அகமும்
வெளியும் வீடும்
கலையும் கணிதமுமாய்
அவன் தூரிகையால்
இன்புற கலந்து
கண்காணும்
இடமெல்லாம்
ஓவியங்கள்
சில வண்ணத்தில்
சில தேவை முடிந்தது
என எல்லோரும்
நினைப்பவைகளால்
சில இன்னும் வெள்ளையாய்
நம் மனதால்
வரைய
கண்காணும்
இடமெல்லாம்
ஓவியங்கள்
இவ் ஓவியங்கள்
உந்துகின்றன
ஓவியனை தேட ..
*** ஓவியனை தேடி...இந்த பயணம் தொடரும்
ஓவியனை தேடி...2
ஓவியனை தேடி...3
Comments
Post a Comment