ஓவியனை தேடி.. 2



நள்ளிரவில் கனா போல
இந்த வீடடை உருவாக்கியவன்
அழைத்து நீ வாழ்வதால்
என்னுடமையாய் இருந்தது
இனி உனக்கு உரியது
என்றான்

அதிகாலை வெளிச்சம்
ஓவியங்களையும்
ஓவியனின் எண்ணத்தையும்
ஒளித்தது

துலங்க துவங்குகிறேன்
எனை அறியாமலே

துலங்க துலங்க
என் வீட்டின் அழகின்
அடர்த்தி
கணத்துக்கொண்டே இருந்தது


மேலே ஏறி
சன்னல் திறந்ததால்
மேகம் சிரிக்கும்

ஊஞ்சலில் ஆடும் பொம்மைகள்
தன்னை ஆடவும் வைக்கும்


வெற்றிடமும் தன்பங்காய்
அழகுசேர்த்தது

கடும் சினம்கொண்டு
தூக்கி எறிந்தேன்
பெரியவனாய் வேடமிட்டு
சுத்தம் செய்கிறேன்றபடி
ஓவியங்களை அழிக்க
வந்த சிறுவனை

கேள்வி பட்டவரை
அவன்
எப்போ வருவான்
எப்போ போவான்
என யாருக்கும்
தெரியாது

கண்டவர் சிலர்
அனுபவ பட்டவர் சிலர்

அவன் படைப்புகளின்
அர்த்தம் புரிய
தொடங்கியவுடன்

தேநீரின் நறுமணத்தில்
தூரத்து இன்னிசையில்
இளவெயில் இதத்தில்
குழந்தையில் புன்சிரிப்பில்
மரங்களின் பசுமையில்
சிறு இலைகளின் நரம்பு அமைப்பில்
மோதிவிடாத   மீன்களின் லாவகத்தில்

என
காண்பவை கேட்பவை
உணர்வபவை
அனைத்திலும்
ஓவியத்தின் சாயல் 

இத்தனை
நேர்த்தியாய் தன்னை
வெளிப்படுத்தும்
கலை வித்தகனை
காணபேரவா..





* தொடரும்...

இப்பதிவில் தொடர்பில்லாதவை  என் நினைப்பவைகள் சிதறி விரவி கிடக்கின்றன 
ஒரு வீட்டில் காண கிடைக்கும் பொருள்களை போல 

இணைக்க முயற்கிறேன் இறுதி பதிவில் 

நன்றி 
-ரமேஷ் 

ஓவியனை தேடி...1
ஓவியனை தேடி...3


Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

வினோதன்