வீடு பிறந்து தவழ்ந்து எழுந்து நடந்து ஓடித்திறிந்து பறந்து பிரிந்த இடமானதும் நான்கைந்து சுவர்களும் கான்கிரிட் கூரையும் கொண்ட கட்டிடமானதும் நித்தம் சோறு பொங்கி காய் கறி வேகவைத்து கணுக்கால் கறுக்க உட்கார்ந்து உண்டு உடல் வளர்க்கும் குடிலானதும் எங்கள் வீடு படர்க்கை* விழியில் இனி தன்மை* விழியில் எம் வீடு எம் தந்தை தாய் தம் கூரை கனவை கட்டமைத்தனர் வெட்ட வெளியிருந்து அவர்தம் மீதி கனவை கதிராய் விளைவிக்க விதைகளை விதைத்தனன் மனவெளியில் எந்தன் கூரையின் உள்ளிருந்து மழலை பதத்தில் தவளையின் தனிமொழியும் குருவியின் செம்மொழியும் மழையின் கிளைமொழியும் இடியின் கொடும்மொழியும் ஆற்றின்(வீதி) கொச்சை மொழியும் அறிந்ததும் சிலவற்றை மறந்ததும் மரமே இல்லாத எம் கதவின் கண்களால் நித்தம் புதிதுபுதிதாய் என்றும் சலிக்காத படம் காட்டியதும் எம் ரசனை வளர்த்ததும் எனை காதல் வருடும்போதும் திறந்தும் காமம் திருடும் வேளையில் அடைத்தும் அன்பின் வழி நின்றது ஜன்னல் என் பாழ்ய பருவத்தின் ஆழ்ந்த் நினைவுகளை மீட்டெடுக்கும் கடவு நிலமிது உண்டு உறங்கி...