ஜன்னல் கதவு

ஜன்னல் கதவு



மழலை பதத்தில்
தவளையின் தனிமொழியும்
குருவியின்  செம்மொழியும்
மழையின்  கிளைமொழியும்
இடியின் கொடும்மொழியும்
ஆற்றின்(வீதி) கொச்சை மொழியும்
அடைமழை குளிரில் நடுங்கிய
குட்டி நாயின் வேதனை மொழியும்
அறிந்ததும் சிலவற்றை  மறந்ததும்
மரமே இல்லாத
எம் கதவின் கண்களால்

நித்தம் புதிதுபுதிதாய்
என்றும் சலிக்காத
படம் காட்டியதும்
எம் ரசனை வளர்த்ததும்

எனை
காதல் வருடும்போதும் திறந்தும்
காமம் திருடும் வேளையில் அடைத்தும்
அன்பின் வழி நின்றதும்

மறு பிறப்பிற்காக
காத்திருக்கின்றன்
இன்று ..

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..