வீடு

வீடு



பிறந்து தவழ்ந்து எழுந்து
நடந்து ஓடித்திறிந்து
பறந்து பிரிந்த இடமானதும்

நான்கைந்து சுவர்களும்
கான்கிரிட் கூரையும்
கொண்ட கட்டிடமானதும்

நித்தம் சோறு பொங்கி
காய் கறி வேகவைத்து
கணுக்கால் கறுக்க உட்கார்ந்து
உண்டு உடல் வளர்க்கும்  குடிலானதும்

எங்கள் வீடு
படர்க்கை* விழியில்

இனி
தன்மை* விழியில்
எம் வீடு

எம் தந்தை தாய் தம்
கூரை கனவை கட்டமைத்தனர்
வெட்ட வெளியிருந்து

அவர்தம் மீதி  கனவை
கதிராய் விளைவிக்க
விதைகளை விதைத்தனன்
மனவெளியில் எந்தன்
கூரையின் உள்ளிருந்து


மழலை பதத்தில்
தவளையின் தனிமொழியும்
குருவியின்  செம்மொழியும்
மழையின்  கிளைமொழியும்
இடியின் கொடும்மொழியும்
ஆற்றின்(வீதி) கொச்சை மொழியும்
அறிந்ததும் சிலவற்றை  மறந்ததும்
மரமே இல்லாத
எம் கதவின் கண்களால்

நித்தம் புதிதுபுதிதாய்
என்றும் சலிக்காத
படம் காட்டியதும்
எம் ரசனை வளர்த்ததும்

எனை
காதல் வருடும்போதும் திறந்தும்
காமம் திருடும் வேளையில் அடைத்தும்
அன்பின் வழி நின்றது
ஜன்னல்

என் பாழ்ய பருவத்தின்
ஆழ்ந்த் நினைவுகளை
மீட்டெடுக்கும் கடவு நிலமிது

உண்டு உறங்கிய சமதளம்
கற்கலாய் ஆனாலும்
நினைவுகள் சமன் செய்யும்

சுற்றிச்சுற்றி தாகம்
தீர்த்த இராட்டினமும்
கூரையை தாங்கிய எழும்பும்
மூட்டும் இரும்பு கம்பிகளாய்
உடல் வெளியே
நினைவு சின்னங்காளாய்

'மாற்றத்திற்கு உட்படாத
எந்த உயிரினமும் அழிந்துவிடும்'
-டார்வின் தத்துவம்

சீராய் அடுக்க வில்லையெனில்
மூளையின்  நினைவு மீட்சி
திறன் கூட  அழிந்துவிடும்

தன் அழகை பாறையில் மோதி உடைத்தும்
பயனில்லா இறகுகளை பிய்த்து எடுத்தும்
அழகும் இறகும் வளரும் வரை
நினைவுகளையும் நம்பிக்கையை யும்
மட்டும் உண்டு  மறு பிறப்பு
வரமாய் வாங்கி வரும்
கழுகு

உடைத்தெடுத்த
தளமும் சுவர்களும்
பிய்த்து எடுத்த
கதவும் ஜன்னல்களும்
புதிதாய் முளைத்த
சுவர்களுடனும் கூரையையும்
தீரா நினைவு சாந்து*களை
கொண்டு  மறு பிறப்பு
வரமாய் வாங்கி வரும்
என் வீடு

பிற்காலத்தில் வளர்ந்து
இன்று பூத்து வாசலை
அலங்கரித்து
வரவேற்கும்
புன்ன மரமே
எம் நம்பிக்கை

அவ்வளவுதான்!!!
நன்றி !!!!
*First Person = தன்மை;Second Person = முன்னிலை;Third Person = படர்க்கை
சாந்து = சிமெண்ட் 

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..