காத்திருந்தது


தேர்ந்தெடுத்திடா சுற்றத்தின்
 நன் வளத்தின் கொடையில்

தவறாமல் இருள் விலக்கும்
இளம்சுடறின் கதகதப்பில்

ஆரத்தழுவும் மனையின்
இறுக்கத்தின் பாதுகாப்பில்

கார்மேகம் கசிந்துருக

தன்னில்
ஒரு விருட்ஷத்தை
ஒளித்து வைத்துக்கொண்டு

காத்திருந்தது
ஆல் விதை !



Comments

  1. அருமையான கவிதை.

    ReplyDelete
  2. நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
    நன்றி நன்பரே !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

வெறுமை