எந்த விதி
திறந்த வெளி சிறையின்
திணறும் மூச்சுக்குள்
உயிர் தாங்கும் சிங்கத்துக்கு
இயற்கை பெயரில்
உயிருடன் விடப்படுகிறது
ஒரு மான்குட்டி...
தப்பிக்க வழியின்றி
தன் பயத்தின் நடுக்கத்தில்
மரணத்தை நோக்கி ஓடும்
சிங்கம் அறியும்
மானும் அறியும்
இயற்கையின் விதியை.
இரக்கமற்ற மனதை
திருப்திப்படுத்தும்
விதி
எந்த விதி
Comments
Post a Comment