நேற்றய கனவு

நேற்றய கனவு நாளைய நிழல் நிலாவின் தோழமையுடன் மின்மினிகள் சமைத்த பால்வீதி ஊடே மெல்லிய கூதல் காற்றிசையில் பூவிதழ் வண்ணம் மாறாமல் விழியில் இரசியம் பரிமாறியபடி அவளும் அதில் மதிமயங்கிய அவனும் நீரோட்ட சலனம் அறியாதபடி நதியில் வாழ்க்கை பயணம் படகில் நேற்றய கனவு நாளைய நிழல் !!