அம்பின் முனையில்

பனி விழகா அதிகாலை அருவிக்காக ஜன்னல் ஓரம் காத்திருந்த சில்லு மணித்துளியும் கார்த்திகை மாலை தீபாவளி மிச்ச பட்டாசு பின்னங்கால் பிடரியில்பட பறக்கவைத்த மணித்துளியும் சுழலியை தரிசிக்க பரவசமாய் மிதந்து தளும்பிய மணித்துளியும் பிரபஞ்சத்தையே ஊசி கண்ணில் அடைக்கும் மனம் இக்கணம் நினைத்தேனில் ஊறியதறிந்து இச் சூரியன் விரைந்து கீழ் இறங்கினான் அம்பின் முனையில் தன் மறுஇதயம் பறந்து வருகிற செய்தி கொடுக்க ..