வாழ்த்துரைக்க!

வாழ்த்துரைக்க !

என்றும்போல்
இன்றும்
ஓர்நாள்
என்றெண்ண
இயலாமல்

மனதின் வண்ணத்தை
மணமாய் மணமாக
உன்னை வருடும்
காற்று வெளியிடையில்
கலந்தபடியே...

உள்ளுணர்வு 
பொய்யாயென 
மெய்யாய்
வருவாய்
நீ என்
முன்னென

பனியில் வேர்த்த
மலரும்

நீ
விழிக்க
விழித்திருந்தது
பிறந்த நாள்
வாழ்த்துரைக்க !
               


Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..