இறந்த காலத்திற்கு..

என் காலத்தை
உடைத்து சென்றாய்
உறைந்து போனது உலகம்

படர்ந்த கார்மேக நினைவுகள்
மட்டும் மழையாய்
பொழிய

தன்னை விதைத்து
துளிர்த்து  விழித்தது
மனம்

ஒவ்வொரு துளியும்
பூக்கள் நிறைந்த மரமானது
கண்காணும் தொலைவு வரை
நறுமண நந்தவனம்
வனமானது

கனத்த உடைந்த காலத்தை
மலைமேலே உருட்டி வந்தேன்
நம்  நந்தவனத்தை இணைக்கும்
முனைப்புடன்

உடைந்தது உறவென்பதால்
பிரிக்க இயலாமல்
நானும் காலத்தோடு
உருண்டு உருண்டு
விழுந்தேன்


விழித்தேன்
வினவுகிறாய்
நெடும்காலமாயிற்றா என
என்முன் நீ
உன் ஒளி பட்டு
காலம் மீண்டும்
இயங்கியது


உறைந்து இறந்த காலத்திற்கு
அளவுகோல் எதற்கு

வா !
விதைகள்
உருவாக்குவோம்
சேமிப்போம்
தேவைப்படும்
அடுத்த
இறந்த காலத்திற்கு

என் கைபிடித்து
செல்லயியலா எனில்
மறக்காமல்
என்  காலத்தை
எடுத்து செல்

உறைந்து இறக்கும்
காலத்திற்கு
அளவுகோல் எதற்கு


Comments

Post a Comment

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை