Posts

ஓவியங்கள்

ஓவியங்கள் படிமங்கள் கொண்டது நிலையான படிமம்மீது சலனப்படிமாய் நித்தம் புதிதாய் ஓவியங்கள் மனம் கொள்ளும் அளவு ஓவியங்களில் தானும் ஓர் அங்கம் என அறியாதோர் ஓவியனை தேடியும் தேடியவர்களை அறிந்தோர் ஓவியனை எம்மூலம்தான் கண்டறிய முடியும்மெனவும் தேடியவர்களையும் , அவனை காண அழைத்தவர்களையும் ஆழ அறிந்தோர் ஓவியனே தாமெனவும் ஓவியங்களில் தானும் ஓர் அங்கம் என அறிந்தோர் தன்னுள் தேட தேடலில் மனமளவு கண்கள் என தெளிந்து ரசிப்பர் ஓவியங்களை !

இலக்கணப்பிழை

Image
மூச்சு காற்றும் பேசிய அன்பு மொழியும் வளி மண்டலத்தில் உள்ளவரை பிரிந்தோம் என்பது இலக்கணப்பிழை திறன்தான் இல்லை மீண்டும் சேர்க்க

வேடிக்கை

Image
தலைவனை வேடிக்கை பார்க்க காத்திருக்கும் மனித பெரும்சுவர்களுக்கு இடையே தன் கடமை கடல் சேர்வதே என சென்றது நதி

பேரன்புடன்

Image
சம நிலை வேண்டி பிரிந்தது மேகமாய் பின் புயலாய் அட்சய மழையாய் தன்னை சார்ந்த ஜீவன்களை வளமாக்கி உரு மாறி மாரி பின் நதியாய் விறைந்து கடல் சேரும் காதலால் கலந்திருந்த உப்பை கலக்க பேரன்புடன்!

வினோதன்

Image
பொறியில் இருந்துகொண்டுடே சிறு எலி தொந்தரவு  ஒழிக்க பொறி வைக்கும் ஆறறிவு வினோதன்

கால பொதி

Image
கால பொதி  பறந்து கொண்டிருந்து மனம் கலங்கிய தருணத்தில் சுமக்க கடினமான பொதியாய் முதுகில் நேரம் !

தடயம்

Image
தடயம்  வெற்றிடம் விரைவாய் நிரப்பியதால் பல வருடம் தங்கி போனது தடயம்